![sunny leone photo in exam hall ticket](http://image.nakkheeran.in/cdn/farfuture/E4gh1t-ucoM5znSXhJ8D2OaktxpYRCUoVV5WO8gRwLg/1668001624/sites/default/files/inline-images/14_62.jpg)
கர்நாடக மாநிலத்தில் கடந்த நவம்பர் 6ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்த ஒரு மாணவி தனது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த ஹால் டிக்கெட்டில் அவரது புகைப்படம் இடம்பெறாமல் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி தனது கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளார். பின்பு கல்லூரி முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே அந்த ஹால் டிக்கெட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அங்கு பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் அந்த மாநில கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "தேர்வு எழுதுவோர் அவர்களுக்கென தனி ஐடி உருவாக்கப்படும். அதனால் அவர்கள் என்ன புகைப்படத்தை அப்லோட் செய்கிறார்களோ அதைத் தான் கணினி ஏற்றுக்கொள்ளும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவர்களது ஐடியை பயன்படுத்த முடியாது. இது முழுக்க முழுக்க அந்த மாணவியின் தவறு தான்" என் கூறினர். மேலும் இது குறித்து விசாரணை நடத்த காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.