![sundar c in Coffee With Kadhal movie release date announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/R0zLS8Pw5jkclhISYp6wOcHybPoQ1SPSPzDYPI38YlU/1665226223/sites/default/files/inline-images/400_80.jpg)
இயக்குநர் சுந்தர் சி, ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் 'காஃபி வித் காதல்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அவ்னி சினிமா மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். இப்படம் ஏற்கனவே அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து சில காரணங்களால் வெளியாகாமல் தற்போது வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.