நடிகர் சிம்பு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத் தொடர்ந்து வெகட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக இங்கிலாந்து நாட்டில் தங்கி உடலைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சிம்பு வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![str](http://image.nakkheeran.in/cdn/farfuture/BVeVcqJ-OCYpEvYlAxXqjGyUxJVSyyQ7fu6x4zb8aFc/1555929613/sites/default/files/inline-images/simbu-gautam-karthick.jpg)
இந்த நிலையில், சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு குறித்து வெளியிட்டுள்ளது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம்.
‘மஃப்டி’ என்னும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் இது. கன்னடத்தில் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக்கும், சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார்.
கன்னடத்தில் மஃப்டி படத்தை இயக்கிய நார்தன்தான் தமிழிலும் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தேர்வு நடைபெற்று வருகிறது. இரத்தம் தெறிக்க வன்முறைக் காட்சிகள் பல கன்னட படத்தில் இருக்கும், அதை மட்டும் தமிழில் கொஞ்சம் குறைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த படம் குறித்த பல தகவல்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.