சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு பட உலகை சேர்ந்த பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள், தயரிப்பாளர்கள் மீது சரமாரியாக பாலியல் குற்றசாட்டுகளை அடுக்கி தெலுங்கு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பிய அவர் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும், தனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்த அவர் இது தமிழ் சினிமாவிற்கான நேரம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு எச்சரித்தார்.
இந்நிலையில் தன் அரை நிர்வாண போராட்டத்திற்கான காரணத்தை நம்மிடையே ஸ்ரீரெட்டி விளக்கி பேசியபோது.... "நான் முதன்முதலில் பாலியல் தொல்லைகள் குறித்து வாய் திறந்த பிறகு எனக்கு நல்லது செய்ய இருந்த அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டன. கையில் பணம் இல்லை, வேலை இல்லை. மேலும் என்னை அமுக்க பார்த்தார்கள். என்னால் தொடர்ந்து போராட முடியாத காரணத்தினால் வெகுண்டு எழுந்தேன். முதலில் நான் ஒரு இந்திய பிரஜை. எந்த ஒரு இந்திய பெண்ணும் பலர் முன் தன் முழு உடம்பை காட்டமாட்டாள். அதுபோல் தான் நானும். ஆனால், என் பிரச்சனையில் சினிமா துறையை சேர்ந்த பலரும் என் முழு உடம்பை பார்த்துள்ளனர். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே முழு நிர்வாண போராட்டம் நடத்தியிருப்பேன், இருந்தும் என் கூச்சபாவம் இப்பிரச்சனையை விட பெரிதாக இருந்ததால் நான் அரைநிர்வாண போராட்டம் நடித்தினேன்" என்றார்.
மேலும் ஸ்ரீரெட்டி குறித்த தகவல்களுக்கு கீழு உள்ள வீடியோவை பார்க்கவும்....