![hdhdhf](http://image.nakkheeran.in/cdn/farfuture/Qf5bpIY-WGA8Jon2DuF84OR_S5c3zAnObjgNezZah-o/1620440680/sites/default/files/inline-images/45047-l.jpg)
தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "தமிழகத்தில் ஆட்சியமைக்கும் முதல்வர் உயர்திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர்களுக்கும், ஏனைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்! கரோனாவை வெல்வதில் தொடங்கி, தமிழகத்தின் தனிப்பெருமை தங்களால் தழைத்து ஓங்கட்டும்!" என பதிவிட்டுள்ளார்.