![spider man no way home movie release day announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/zKghHUWFAdgKXeZzywxTyuLDRX522uFZvKB8jfm1Ads/1638248750/sites/default/files/inline-images/home_1.jpg)
கற்பனை கதாபாத்திரங்களான சூப்பர் ஹீரோக்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கென்றே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் ஸ்பைடர் மேன் படத்திற்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர் மேன் ஃபார் ஃபரம் ஹோம்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' என்ற தலைப்பில் அடுத்த பாகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதில் 'ஸ்பைடர் மேன் ஃபார் ஃபரம் ஹோம்' படத்தில் நடித்த டாம் ஹாலண்ட், ஜெண்டயா, வில்லெம் டஃபோ உள்ளிட்ட பலரும் இப்படத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தை மார்வெல் ஸ்டூடியோ, கொலம்பியா பிக்சர்ஸ், பாஸ்கல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/UOK98AI8Gjiq7VF7KM3cdS6GYOj-f6cchaYUxPnybqA/1638261815/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad.jpg)
இந்நிலையில், 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' திரைப்படம் ஒருநாளுக்கு முன்பாகவே இந்தியாவில் டிசம்பர் 16ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.