![soori thanked dhanush for viduthalai song](http://image.nakkheeran.in/cdn/farfuture/QAycZzvzs3k2B1E-jwshOg4TaPOqHDbLTL-P895rXnM/1675860049/sites/default/files/inline-images/149_20.jpg)
தனுஷ் நடிப்பைத் தாண்டி பாடுவது, பாடலுக்கு வரிகள் எழுதுவது, தயாரிப்பு என பல பரிமாணங்களில் பயணித்து வருகிறார். அந்த வகையில் இளையராஜா இசையில் முதன்முறையாக 'விடுதலை' படத்தில் பாடியுள்ள 'ஒன்னோட நடந்தா' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், விடுதலை படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூரி தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலைப் பாடித் தந்த தனுஷ் சார்க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இந்தப் படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த தனுஷ், "லவ் யூ" என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
Love you 🤗 https://t.co/FGjrV14IXH— Dhanush (@dhanushkraja) February 8, 2023