![sonu sood](http://image.nakkheeran.in/cdn/farfuture/gQihSll7crPM2Qruabhmt20nua_SqudmoQe4dCqL-5s/1619180668/sites/default/files/inline-images/12_63.jpg)
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு கடந்த சனிக்கிழமையன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தன்னுடைய வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட சோனு சூட், உரிய சிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில், 7 நாட்களுக்குப் பிறகு கரோனா தொற்றிலிருந்து நடிகர் சோனு சூட் முழுமையாகக் குணமடைந்துள்ளார். இத்தகவலை, அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.