![sivakarumar talks ponniyin selvan vanthiyathevan](http://image.nakkheeran.in/cdn/farfuture/eMgi4w55HRhBSim6MSs8F9ol2Ay1xju6wVA2sP3pheo/1662467555/sites/default/files/inline-images/1858_0.jpg)
இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரம் குறித்து நடிகர் சிவகுமார் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், "வரலாற்றில் இவ்வளவு சுவாரஸ்யமா வந்தியத்தேவன் இருந்திருப்பானோ என்னவோ, கதையில் படு சுவாரஸ்யமான கதாபாத்திரம். ஹீரோன்னா எல்லா இடத்துலேயும் ஜெயிப்பான் என்ற வழக்கமான ஃபார்முலாவை உடைச்சு, இவன் அடிபடுவான், அவமானப்படுவான் ஜெயிலுக்குப் போவான், தப்பு செய்துவிட்டு பூங்குழலி கிட்ட அசடு வழிவான். வந்தியத்தேவன் படைப்பை தலைமுறைகள் கடந்து அவனை நாயகனாக மக்கள் கொண்டாடும் விதமாக எழுதியிருப்பார் கல்கி. பொன்னியின் செல்வன் நாவல் போலவே இந்த படமும் காலம் கடந்து மக்கள் மனதில் நிக்கமுன்னும் என்று வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.