![Sivakarthikeyan remembers musician rrr movie pre release event](http://image.nakkheeran.in/cdn/farfuture/5hgw14Pl5qrJJeAwXqTycfAnhAmui-KDqIPLFZ3SDaM/1640693010/sites/default/files/inline-images/medai.jpg)
இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கியிருக்கிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜனவரி மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் ப்ரீ புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று (28.12.2021)சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெறும் 'உயிரே' பாடலை கார்த்திக் தேவராஜ் இசைக் குழுவினர் மேடையில் பாடினார். இதை அசந்து பார்த்த ராஜமௌலி மேடைக்கு வந்தது அனைவரையும் பாராட்டினார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மேடையில் இருந்தவர்களை குறிப்பிட்டு அவர்களுக்கான பாராட்டுகளைப் பெற்று தந்தனர். அப்போது தொகுப்பாளர்கள் ட்ரம்ஸ் வாசிக்கும் இசைக்கலைஞர் பெயரை மறந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஞாபகப்படுத்தி அவருக்கான பாராட்டைப் பெற்றுத் தந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.