Skip to main content

ஏலியனுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன் - ட்ரெண்டிங்கில் முதலிடம்

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
sivakarthikeyan ayalaan trailer trending 1 in youtube

'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகப் பணிகள் நடந்து உருவாகியுள்ள படம் 'அயலான்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.  

இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. டீசர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் படத்திற்கு உலகளவில் பல நாடுகளில் மற்றும் திரை எண்ணிக்கையில் அதிகளவு வெளியாகும் திரைப்படம் அயலான் எனப் படக்குழு தெரிவித்தது. இப்படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு சித்தார்த் டப்பிங் பேசியுள்ளார்.

இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அயலா அயலா...’ லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதையடித்து கடந்த மாதம் 26 ஆம் தேதி ஆடியோ லான்ச் நடந்தது. பொங்கலை முன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி இப்படம் ரிலீஸாகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஒரு நோக்கத்துடன் பூமிக்கு வரும் ஏலியன், சிவகார்த்திகேயனிடம் சேருகிறது. அதன் பின்பு ஏலியனுடைய நோக்கத்திற்கு சிவகார்த்திகேயனும் சேர்ந்து உதவி பண்ணுவது போல் அமைந்துள்ளது. அப்போது வரும் சிக்கல்களை எதிர்கொண்டு அந்த நோக்கத்தை நிறைவேற்றினார்களா இல்லையா என்பதை ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது. யூட்யூபில் வெளியான இந்த ட்ரைலர், தற்போது வரை 2.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடம் பிடித்துள்ளது.  
 

சார்ந்த செய்திகள்