மிருகம், சிந்துசமவெளி, கங்காரு போன்ற திரைப்படங்களின் இயக்குனர் சாமி, அடுத்ததாக ஒரு ரீமேக் படத்தை இயக்கவிருக்கிறார். மதுரை முத்து மூவிஸ், கனவு தொழிற்சாலை நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
![akka kuruvi](http://image.nakkheeran.in/cdn/farfuture/nQwLIPLfl5GPxQb6VhwXV7U1FqnEMpZPdSIofdvDmuA/1554467706/sites/default/files/inline-images/akka%20kuruvi.jpg)
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் தி ஹெவன்’திரைப்படம் உலக அளவில் சிறந்த படமாக போற்றப்படுகிறது. ஆஸ்கார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற இந்த படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை மதுரை முத்து மூவிஸ் பெற்றுள்ளது. கனவு தொழிற்சாலையும் இணைந்து தமிழ்-தெலுங்கு மொழிகளில் தயாரிக்கவிருக்கும் இந்த படத்திற்கு ‘அக்கா குருவி’என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு ஏழை சிறுமிக்கும், அவள் தம்பிக்கும் இடையிலான அன்பை மையமாக கொண்ட இந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்க, சிந்து சமவெளி இயக்குனர் சாமி இயக்குகிறார். கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.