Published on 11/12/2018 | Edited on 11/12/2018
![udhay](http://image.nakkheeran.in/cdn/farfuture/5YUQlIiEuxck8kYEG_RQmOQzNQbS2pe7YqyeCuLSnmw/1544543120/sites/default/files/inline-images/jjjjj.jpg)
விஷ்ணு விஷால் நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரெஜினா கசன்ட்ரா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஓவியா மற்றும் யோகி பாபு, ஆனந்த் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் விஷ்ணு விஷால் தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள் நிலையில், 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படம் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் தன் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் பெற்றுள்ளதை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் இப்படம் 'அடங்க மறு’, ‘சீதக்காதி’, ‘மாரி 2’, ‘கனா’ உள்ளிட்ட படங்களுடன் மோதவுள்ளது உறுதியாகியுள்ளது.