![silambarasan cries on maanaadu movie audio release function](http://image.nakkheeran.in/cdn/farfuture/TsiOqnC6AHPg-eFUWyzORBJSPl78ZRL-YZ555_RG_p0/1637227135/sites/default/files/inline-images/SIMBU.jpg)
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, ‘மாநாடு’ படத்தின் சிறு முன்னோட்டமாக ட்ரைலரை வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25ஆம் தேதிக்குத் தள்ளிப் போனது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/8gJeLTd_C_qn9vAA1-bF2Kyy7Rzlu4TlWPooWDUEt-8/1637227159/sites/default/files/inline-images/jango-inside-news-ad_45.jpg)
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (18.11.2021) சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய சிம்பு, “என் படத்திற்கும், எனக்கும் நிறைய பேர் பிரச்சனை கொடுக்கிறார்கள். எனது படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள். என் பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என கண்கலங்கி பேசியுள்ளார்.