Published on 18/08/2022 | Edited on 18/08/2022
![Shyam Singha Roy Oscar Nominations 3 Categories](http://image.nakkheeran.in/cdn/farfuture/LwvMgANKsWPlg3Q83e9yWK0ntr0b5kdKWMzSnwrdT0I/1660808559/sites/default/files/inline-images/1615.jpg)
கடந்த ஆண்டு இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான படம் ‘ஷியாம் சிங்கா ராய்’. இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மறு ஜென்மம் எடுக்கும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையை கதையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, விமர்சகர்கள் மத்தியில் பெரியளவில் பாராட்டுகளைக் குவித்தது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/vRU3JHHEyU27Q184EgC-nBLu0MgNaUoxVHbkYXmXRXU/1660808704/sites/default/files/inline-images/Thiruchitrambalam-Movie--Article-Ad-size-500-X-300_2.jpg)
இந்நிலையில் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு 3 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த காலகட்ட திரைப்படம்(periodic film), சிறந்த பின்னணி இசை (background score), பாரம்பரிய கலாச்சார நடனம் (classical cultural dance Indie film) ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.