![shruthi hassan about mumbai airport one fan following incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/chIwg9ngmpFcxf7gfuwa-tEFEtQxUimnD4ZpKFggHR8/1695466173/sites/default/files/inline-images/54_53.jpg)
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 28 ஆம் தேதி ரிலீஸாகயிருந்த நிலையில் தற்போது அது தள்ளிப் போகவுள்ளதாகப் படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இதைத் தவிர்த்து 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
காந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் ஸ்ருதிஹாசன் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், கருப்பு சட்டை அணிந்த ஒரு நபர் சுருதி ஹாசனை பின் தொடர்கிறார். அதை உணர்ந்த ஸ்ருதிஹாசன் அருகிலிருந்தவர்களிடம் யார் அவர், எதற்காக இங்கு நிற்கிறார்? எனக் கேட்கிறார். பின்னர் அந்த நபர் ஸ்ருதிஹாசனிடம் பேச முற்பட்டபோது, "நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை" எனக் கூறிவிட்டு புறப்பட்டார்.
இதையடுத்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் ஸ்ருதிஹாசன். அப்போது ஒரு ரசிகர் அந்த சம்பவம் தொடர்பான கேள்வியை கேட்டார். அதற்குப் பதிலளித்த அவர், "நான் நடந்து கொண்டிருந்த போது அந்த நபர் பின்தொடர்வதை கவனித்தேன். உடனே என் காருக்கு அருகில் வந்து நிற்கும்படி அந்த நபரை அங்கிருந்த புகைப்படக்காரர் ஒருவன் சொன்னார். நானும் புகைப்படக்காரருக்கு நண்பராக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அந்த நபர் மிகவும் நெருங்கி வந்ததால் அசவுகரியமாக உணர்ந்தேன். எனக்கு அவரை யார் என்று தெரியவில்லை. அவர் யார் என்று புகைப்படக்காரர் சொல்வார் என்று நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை.
எனக்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லை. நான் என் வாழ்க்கையை முடிந்தவரை பாதுகாப்பாக வாழ விரும்புகிறேன். என்னுடைய தனிப்பட்ட இடம் என்னுடையது" என்றார்.