Published on 11/11/2020 | Edited on 11/11/2020
![shriya](http://image.nakkheeran.in/cdn/farfuture/38-ImAYO8ZNSvnHObdfFPABT1yVKxuDI9ErG47Zj8yQ/1605089023/sites/default/files/inline-images/shriya-im.jpg)
ஸ்ரேயா சரண் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கும் அந்தாலஜி, 'கமனம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த அந்தாலஜிக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
அறிமுக இயக்குனர் சுஜனா ராவ் இயக்கும் 'கமனம்' அந்தாலஜியின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் , இந்த அந்தாலஜியின் ட்ரைலர் வெளியாகிவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு மொழி ட்ரைலரையும், அந்த மொழியின் பிரபல நடிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழில் ஜெயம் ரவி, மலையாளத்தில் பகத் பாசில், கன்னடத்தில் சிவ ராஜ்குமார், தெலுங்கில் பவன் கல்யாண் , ஹிந்தியில் சோனு சூட் ஆகியோர் கமனம் அந்தாலஜியின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.