![dbdbdfbnf](http://image.nakkheeran.in/cdn/farfuture/6DvyzcruDPPoTStE8l6cgmI1VkpEgKpNH6WtBXiML6E/1626328683/sites/default/files/inline-images/E6RCaDmVIAM1Z95.jpg)
தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி மற்றும் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நேற்று முன்தினம் (13.07.2021) தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.
![vgesdgsedse](http://image.nakkheeran.in/cdn/farfuture/y60kZqpD0jO7hnAA7CG71V_x6zmmOhz4vTMB8PIeHUY/1626328705/sites/default/files/inline-images/E6RCaDlUUAAa3IP.jpg)
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் ஷங்கர் திடீர் விஜயம் செய்துள்ளார். அங்கு படப்பிடிப்பை பார்த்த ஷங்கர் படக்குழுவினருடன் உரையாடினார். இதையடுத்து அவர் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது. பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழக உரிமையை மாஸ்டர் பீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.