![hdfh](http://image.nakkheeran.in/cdn/farfuture/bjfRQu3JxGno7mJvTmq8x16Tx7NHQfMDxTBQ7uTriZA/1589626505/sites/default/files/inline-images/xshahrukh-khan_7.jpg.pagespeed.ic_.BLTOEMOqj4.jpg)
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனிடையே பலரும் மக்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவி வருகின்றனர். அதேபோல் பல நடிகர்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் தன் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை மூலம் கோடிக்கணக்கான பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும் மும்பையில் இருக்கும் தனது அலுவலகக் கட்டிடத்தை, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தங்க வைக்க மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ள அவர் கரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பது குறித்து சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில்...
"கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் துணிச்சலான சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், மருத்துவ அணிகளுக்கும் ஆதரவு தெரிவிப்போம். அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க நிதி தருவோம். நானும், மீர் அறக்கட்டளையும் இணைந்து, நமது மருத்துவப் போராளிகளை பாதுகாக்க உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் முயற்சியில் இனி நீங்களும் பங்காற்றலாம். நாங்கள் திரட்டும் நிதிக்கு பங்களியுங்கள். தனிப்பட்ட பாதுகாப்பு கவசம், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு எடுத்துச் செல்ல உதவுங்கள்" என கூறியுள்ளார்.
Let’s support the brave health officials and medical teams that are leading the fight against the coronavirus by contributing towards supplies and personal protective equipment (PPE). A little help can go a long way. @MeerFoundationhttps://t.co/zfUWD5GnrD https://t.co/qMG39nau8B
— Shah Rukh Khan (@iamsrk) May 14, 2020