Skip to main content

அட்லீ - ஷாருக்கான் படம் குறித்து வெளியான புதிய தகவல்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

atlee with shahrukh khan

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீ, தற்போது நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கிவருகிறார். இது பாலிவுட் திரையுலகில் அட்லீயின் அறிமுகப் படமாகும். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் புனேயில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர்.

 

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘லயன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புனே மெட்ரோ ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி புனே கார்ப்பரேஷனிடம் படக்குழு விண்ணப்பித்திருந்தது. இது தொடர்பாக படக்குழு சமர்ப்பித்துள்ள விண்ணப்ப படிவத்தில் படத்தின் பெயர் ‘லயன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘லயன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

அதே நேரத்தில், இது தற்காலிகமான பெயராகக்கூட இருக்க வாய்ப்புள்ளதால், படத்தின் தலைப்பு தொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்போதுதான் உண்மையான தலைப்பு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

 

 

சார்ந்த செய்திகள்