![selvaraghavan to join vishal mark antony movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/bZ1d1-qDSBYZkPCApkYwhyWoXlVRn2h2t2T8IMsYkKc/1674556852/sites/default/files/inline-images/09_33.jpg)
'லத்தி' படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்த படக்குழு, நடிகை அபிநயா 'வேதா' என்ற கதாபாத்திரத்திலும், மலேசிய நடிகர் டிஎஸ்ஜி ‘தங்கராஜ்’ என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக அவர்களது கேரக்டர் போஸ்டரை வெளியிட்டனர். இந்நிலையில், இயக்குநர் மற்றும் நடிகருமான செல்வராகவன் இப்படத்தில் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரமா அல்லது வில்லன் கதாபாத்திரமா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டு வரும் படக்குழு விரைவில் செல்வராகவன் குறித்த அப்டேட்டையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..
செல்வராகவன் இயக்குநராக அறிமுகமாகியிருந்தாலும் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், 'சாணிக் காயிதம்', 'பீஸ்ட்' படங்களைத் தொடர்ந்து மோகன்.ஜியின் 'பகாசூரன்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஃபர்ஹானா' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தில் இணைந்துள்ளதாக தெரிகிறது.