![sivakarthikeyan](http://image.nakkheeran.in/cdn/farfuture/D7A0eIGIpaCFnlzDr70gelHDL-8No8GVYf4rmofySrY/1533347678/sites/default/files/inline-images/sisisissi.jpg)
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படம் 'சீமராஜா'. கிராமப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக சமந்தாவும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனும், நெப்போலியனும் நடித்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. இதுகுறித்த அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில்... "உங்கள் அன்போடும், ஆதரவோடும் @ponramVVS இயக்கத்தில் @Siva_Kartikeyan நடிக்கும் #சீமராஜா படப்பிடிப்பு இன்று மாலை இனிதே நிறைவடைகிறது. பணியாற்றிய அனைவரின் ஒன்றரை ஆண்டு கடும் உழைப்பை கொண்டாடி, கவுரவித்து நன்றி சொல்லும் #SeemaRajaFarewellDay & #சீமராஜா நன்றிவிழா இன்று மாலை நடைபெறுகிறது" என பதிவிட்டுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் வரும் செப்டம்பரில் வெளியாகிறது.