![saravanan](http://image.nakkheeran.in/cdn/farfuture/wMV8iCCInwDED0wEVQHdLlDQKU9IuV2lITuCga0M_3o/1544092826/sites/default/files/inline-images/Actor-Saravanan.jpg)
வைதேகி வந்தாச்சு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, பிறகு பார்வதி என்னை பாரடி, பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி, சூரியன் சந்திரன், சந்தோஷம், உட்பட 25 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் நடிகர் சரவணன். இவர் பருத்தி வீரன் படத்தில் சித்தப்பூ செவ்வாழை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பருத்திவீரன் சரவணன் என்று மிகப் பிரபலமானார். சமீபத்தில் அவருக்கு பன்றி காய்ச்சல் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில் தற்போது இதுகுறித்து அவர் விளக்கமளித்து பேசியபோது...
நான் சேலத்தில் இருந்த போது காய்ச்சல் இருந்தது. அங்கு சிகிச்சை எடுத்து விட்டு சென்னை வந்த போதும் காய்ச்சல் குணமாகாததால் இங்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். மூன்று நாட்கள் கழித்து அது சாதாரண காய்ச்சல் தான் என்று தெரிவந்தவுடன் சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த பின் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் ஒரு படத்தில் நடித்தும் விட்டேன். இன்னமும் பல பேர் எனக்கு பன்றி காய்ச்சல் இருக்கிறது என்று போன் செய்து நலன் விசாரிக்கிறார்கள். எனக்கு அப்படி ஒன்றும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.