![sarathkumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/OVWBOG8eR69-SGIFeLuEyuC9hfawYoGEkQtvYUclGKg/1594791005/sites/default/files/inline-images/sarathkumar-1.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமாரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை சமூக ஊடகத்தில் 'Birds of Prey - The Hunt Begins' என்ற வெப்சீரிஸின் போஸ்டர் வெளியாகி வைரலானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் வெப் சீரிஸில் நடிப்பது இதுவே தொடக்கமாகும்.
இந்த அறிவிப்பை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதன் மூலம் ஓ.டி.டி. தளத்தில் சரத்குமார் அறிமுகமாகவுள்ளது உறுதியாகியுள்ளது. இதை யார் இயக்குகிறார்கள், யாரெல்லாம் சரத்குமாருடன் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்தவொரு தகவலையுமே ராதிகா சரத்குமார் வெளியிடவில்லை.
மேலும், இந்த வெப் சீரிஸ் அர்ச்சனா என்பவர் எழுதிய 'Birds of Prey' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.