![santhanam](http://image.nakkheeran.in/cdn/farfuture/NMFTdUZO38j2k4btyR-2IYNMJaS6T77k4bVucA75hCA/1606971993/sites/default/files/inline-images/parris-jeyaraj-2-im.jpg)
நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த 'பிஸ்கோத்து' படம், தீபாவளிக்கு வெளியானது.
இதனைத் தொடர்ந்து, சந்தானம் அடுத்து நடித்து வரும் படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த 1 ஆம் தேதி வெளியானது . அப்படத்திற்கு, 'பாரிஸ் ஜெயராஜ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, சந்தானத்தை வைத்து 'ஏ1' படத்தை இயக்கிய ஜான்சனே, இப்படத்தையும் இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தநிலையில், சந்தானம் 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் டப்பிங்கை நேற்று தொடங்கியுள்ளார். இப்படம் வருகின்ற ஜனவரி மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஜெயராஜ் படத்தில், சந்தானம் கானா பாடகராக நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.