இந்தியா முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதனால் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் முதலில் இந்தியில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்நது பிற மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் சல்மான் கான் இந்தியில் கடந்த 13 ஆண்டுகால பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் 16 வது சீசன் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சல்மான் கான் 16 வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக டிவி நிர்வாகத்திடம் இது வரை தனக்கு வழங்கப்பட்டு வந்த சமபளத்தை மேலும் 2 மடங்காக உயர்த்தி தர வேண்டும் என்று கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடைசியாக நடைபெற்ற சீசனில் சல்மான்கானுக்கு சம்பளமாக ரூ.350 கோடி கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதை உயர்த்தி ரூ.1050 கோடி கேட்டுள்ளதால் டிவி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளதாம். சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் பெரும் வரவேற்பை பெறுவதால் அவர் கேட்ட தொகையை டிவி நிர்வாகம் அளிக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.