Skip to main content

ராவணனாக நடிக்கும் சைஃப் அலிகான்!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020
saif ali khan

 


இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற படம் தன்ஹாஜி. அஜய் தேவ்கன் மற்றும் சைஃப் அலிகான் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை அஜய் தேவ்கன், பூஷண் குமார் உள்ளிட்டோர் தயாரித்தனர். ஓம் ராவத் என்பவர் இப்படத்தை இயக்கினார்.

 

 

தற்போது ஓம் ராவத் இயக்கவுள்ள அடுத்த படத்தையும் டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷண் குமாரே தயாரிக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

 

 

'ஆதிபுருஷ்' என்ற பெயரில் உருவாகும் இந்த படம் 3டியில் உருவாகிறது. இந்தியில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. இது ராமாயணம் கதையின் ஒரு பகுதிதான் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

மேலும், இந்த படத்தில் வில்லனாக சைஃப் அலிகான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராவணனின் கதாபாத்திரமாகதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்