Skip to main content

செல்வராகவன் நடிப்பு குறித்து நெகிழ்ந்த 'சாணிக்காயிதம்' பட இயக்குநர்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

selvaraghavan

 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சாணிக் காயிதம்'. இப்படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது, செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாகும். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், சாணிக்காயிதம் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், செல்வராகவன் நடிப்பு குறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "எல்லா இயக்குநர்களும் சிறந்த நடிகர்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், செல்வராகவன் சார் ஆகச் சிறந்த நடிகர்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்