Skip to main content

விஜய் அப்பா தொடர்ந்த வழக்கு... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

sa chandrasekar


கடந்த 2007-ஆம் ஆண்டு, விஜய் நடிப்பில் வெளியான படம் 'அழகிய தமிழ்மகன்'. இந்தப் படத்தை விஜய்யை வைத்து 'பைரவா' படம் இயக்கிய பரதன் இயக்கியிருந்தார். 

 

விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா மற்றும் நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

 

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அப்பச்சன் மீது எஸ்.ஏ. சந்திரசேகர் செக் மோசடி வழக்கைத் தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கில் அப்பசனுக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்