![russo brothers said dhanush negative role the gray man film](http://image.nakkheeran.in/cdn/farfuture/V_gLgFk2SgrTV1MvAduLeznCshnbFO4BdiX9XMeJpHQ/1653561175/sites/default/files/inline-images/701_15.jpg)
தனுஷ் 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் என அறியப்படும் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிகர் தனுஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இடபத்தை ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'தி கிரே மேன்' படம் தொடர்பாக ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடிய இயக்குநர்கள் ரூசோ பிரதர்ஸ் தனுஷ் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளனர். அதில், "இப்படத்தில் ரயன் காஸ்லிங் கதாபாத்திரத்திற்கு பிறகு தனுஷின் கதாபாத்திரம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் தலைசிறந்த கொலையாளி கதாபாத்திரத்தில் கெட்டவனாக தனுஷ் நடித்துள்ளார். அவரை மனதில் வைத்தே இந்த கதாபாத்திரியாதை எழுதினோம். நாங்கள் இருவரும் அவரது ரசிகர்கள். தனுஷின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் விரைவில் அவரது கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை எதிர்பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.