Skip to main content

"உம்ம்மா... இதுதானே வேணும், வச்சுக்கோ" - கமல் - ரோபோ ஷங்கர் கலகல சந்திப்பு

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

robo shankar met kamalhaasan

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. 

 

இதனிடையே நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார் ஒன்றையும், படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கை பரிசாக அளித்தார்.  அத்துடன்  விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தைப் பரிசாக அளித்தார். 

 

இதனைத்தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து விக்ரம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்  விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமலின் தீவிர ரசிகரான ரோபோ ஷங்கர் அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் கமலிடமிருந்து முத்தம் ஒன்று அன்பு பரிசாக வேண்டும் என்று ரோபோ ஷங்கர் கேட்டுள்ளார். இதையடுத்து கமல் உனக்கு முத்தம் தானே வேணும் இந்தா வச்சுக்கோ என்று கொடுத்துள்ளார். தனது ஆஸ்தான நாயகன் கமலிடமிருந்து முத்தம் கிடைத்துள்ளதால் ரோபோ ஷங்கர் மகிழ்ச்சியில் உள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரம்மாண்ட பட்ஜெட் -  ஒரே மாதத்தில் வெளியாகும் கமலின் இரண்டு படங்கள் 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
kamal indian 2 and kalki 2898 ad both will released in june month

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இப்படம் சைன்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து பிரபாஸின் கதாபாத்திர போஸ்டர் முன்னதாக வெளியிடப்பட்டது. அவர் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அண்மையில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்து  டீசர் வெளியிட்டிருந்தனர். இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வருகிற மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலால் இப்படம் தள்ளிப்போகும் என கூறப்பட்டது. 

kamal indian 2 and kalki 2898 ad both will released in june month

இந்த நிலையில் இப்படத்தின் புது ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜுன் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புது ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள இந்தியன் 2 படம், கல்கி  2898 ஏடி வெளியாகவுள்ள அதே மாதத்தில் வெளியாகவுள்ளது. தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் ஒரே மாதத்தில் கமலின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் 2 மற்றும்  கல்கி 2898 ஏடி இரு படங்களும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.