![ranveer singh explain controversy photo](http://image.nakkheeran.in/cdn/farfuture/jyihBlAPG2hUdBBe_xmiHCfJdpHb7y7l_6vF6yPc-A8/1663237810/sites/default/files/inline-images/2060.jpg)
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் ரன்வீர் சிங் சமீபத்தில் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்பு ரன்வீர் சிங்கிற்கு எதிராக நூதன முறையில் சிலர் போராட்டமும் நடத்தினர்.
மேலும் இது தொடர்பாக அவர் மீது மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் ரன்வீர் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு அதிகாரிகள் முன் ஆஜரான ரன்வீர் சிங், நான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை. யாரோ என் புகைப்படத்தை எடுத்து நிர்வாணமாக இருப்பது போல மார்பிங் முறையில் சித்தரித்து வெளியிட்டுள்ளதாக புதிய விளக்கத்தை கொடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.