Skip to main content

அது உண்மை இல்லை - ரன்வீர் சிங் குறித்து வைரலாகும் புகைப்படம்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Ranveer Singh driving Aston Martin with expired insurance

 

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் ரூ.3.9 கோடி மதிப்பிலான சொகுசு காரை இன்சூரன்ஸ் காலாவதியாகியும் ஓட்டி வருகிறார் என சமூக வலைதளத்தில் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். "ரன்வீர் சிங் இன்சூரன்ஸ் காலாவதியான காரை ஓட்டிவருகிறார். அதை புதிப்பிக்காமல் காரை ஓட்டும் அவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும்" எனக் குறிப்பிட்டு ரன்வீர் கார் ஓட்டும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். மேலும் மும்பை காவல் நிலைய சமூக வலைதள பக்கத்தையும் டேக் செய்திருந்தார். 

 

இதற்கு பதிலளித்த மும்பை போலீசார் "இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்" என தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ரன்வீர் சிங் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். 

 

இந்நிலையில் ரன்வீர் சிங் தனது காருக்கு சரியான முறையில் இன்சூரன்ஸ் செய்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது சம்மந்தப்பட்ட ஆவணங்கள் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படத்தில் உள்ள ஆவணப்படி கடந்த ஜூலை மாதம் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனத் தெரிகிறது.   

 

ரன்வீர் சிங்கிடம் கோடிக் கணக்கிலான சொகுசு கார்கள் நிறைய இருக்கின்றன. அந்தக் கார்களில் சில சமயம் நகரங்களில் உலா வந்து கொண்டிருப்பார். சமீபத்தில் கூட தனது ரூ. 3.9 கோடி மதிப்பிலான காரை மும்பை விமான நிலையத்தில் இயக்கியபோது ரசிகர்களிடம் கவனம் பெற்று ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்