Published on 22/10/2018 | Edited on 22/10/2018
![rd](http://image.nakkheeran.in/cdn/farfuture/-DocLM7UjqplFtbrBqZ2d7E5kqBXFmmr-wuQ05pp4Ck/1540233040/sites/default/files/inline-images/rd.jpg)
நீண்ட நாட்களாக காதலித்து வரும் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என செய்திகள் பரவலாக வெளியாகியிருந்த நிலையில் தற்போது நடிகை தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில்... "எங்கள் குடும்பாத்தாரின் ஆசிகளுடன் எங்கள் திருமணம் வரும் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் இந்த நேரத்தில், எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்’ என பதிவிட்டு திருமணம் செய்யபோவதை உறுதி செய்துள்ளார்.