பாகுபலி திரைப்பட தொடர் அடைந்த வெற்றியை அடுத்து இந்திய சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் அதிக பொருட்செலவில் இதிகாச கதைகளையும், ராஜா காலத்து புனைவுகளையும் எடுக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.
தற்போது இந்தியாவின் முக்கிய இதிகாச நூல்களில் ஒன்றான ராமாயணத்தை மூன்று பாகங்களில் திரைப்படமாக உருவாக்க மது மண்டேனா, அல்லு அரவிந்த், நமித் மல்ஹோத்ரா என மூன்று தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த படங்களை டங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரியும், மாம் படத்தை இயக்கிய ரவி உத்யாரும் இயக்க இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று இந்த படங்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும். இந்த படத்தை தயாரிக்க சுமார் 500 கோடி வரை செலவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கான தேர்வு நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
கடந்த மூன்று வருடங்களாகவே இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 2021-ஆம் வருடம் முதல் பாகத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.