Skip to main content

தயாரிப்பாளராக அறிமுகமாகும் பிரபல நடிகர்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Ram charan debuting as a producer!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. 

முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ராம் சரண், தற்போது தயாரிப்பாளராகவும் கால் பதிக்கவுள்ளார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, கார்த்திகேயா ஆகிய 2 வெற்றி படங்களைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனத்தின் விக்ரம் ரெட்டி ஆகியோருடன் இணைந்து நடிகர் ராம் சரண் ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தை தயாரிக்கிறார். ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா நடிப்பில் உருவாகும் இப்படத்தின் தொடக்க விழா இன்று தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. சாயீ மஞ்சரேக்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல தயாரிப்பாளருக்கு 6 மாத சிறைத் தண்டனை!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
The famous producer was sentenced to 6 months in prison

தங்கமீன்கள், தரமணி, குற்றம் கடிதல் போன்ற படங்களை ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் மூலம் தயாரித்தவர் ஜெ.சதீஷ்குமார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு, சினிமா பைனான்சியரான சுகன் போத்ராவிடம் சுமார் ரூ.2.6 கோடி கடன் வாங்கியிருந்தார். 

தான் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்காக தயாரிப்பாளர் ஜெ. சதீஷ்குமார், பைனான்சியர் சுகன் போத்ராவிடம் காசோலையை வழங்கியுள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட சுகன் போத்ரா, வங்கிக் கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகன் போத்ரா, சென்னை ஜார்ஜ் டவுன் 4வது விரைவு நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். 

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஏ.கே.என். சந்திரபிரபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அந்தக் கடன் தொகையை வட்டியுடன் சினிமா பைனான்சியர் சுகன் போத்ராவிடம் திரும்பிச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

குளிர்பானத்தில் மயக்க மாத்திரை - பாலியல் வழக்கில் தயாரிப்பாளர் கைது 

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
producer mohammed ali arrest

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமதி அலி என்பவர் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்து வந்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவன அலுவலகத்தை திருவேற்காடு கீழ் அயனம்பாக்கத்தில் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளார். அந்த பெண் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் முகமது அலி மீது கடந்த மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முகமது அலி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொல்லை கொடுத்தார். 

மேலும், குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். பின்பு கர்ப்பமடைந்த என்னிடம், சத்து மாத்திரைகள் என கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவினை கலைத்துள்ளார். அதோடு கருக்கலைப்பு செய்ததை வெளியே சொன்னால், கொலை செய்து விடுவேன் என்றும், தன்னிடம் தவறாக நடந்துகொண்ட போது பதிவு செய்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்றும் மிரட்டி தன்னிடம் ரூ. 5 லட்சம் வரை பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

இது புகாரை பெற்றுக் கொண்ட அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், புகார் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த பெண் முன்வைத்த குற்றச்சாட்டுகள்
அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர், தயாரிப்பாளர் முகமது அலி மீது
4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.