Skip to main content

"அருமையான படம்; நம் நெஞ்சை விட்டு அகலாது" - ரஜினிகாந்த் பாராட்டு

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

rajinikanth Praised sivaranjiniyum innum sila pengalum

 

வசந்த் இயக்கத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், 'மயக்கம் என்ன' சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. சர்வதேச அரங்கில் பாராட்டுகளை பெற்ற இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது அளிக்கப்பட்டது. 

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மதிப்பிற்குரிய இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் சார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்குநர்களில் வஸந்த் மிக முக்கியமானவர். பாலசந்தர் சாருக்கு  மிகுவும் பிடித்தவர். இயக்குநர் வசந்த் இயக்கிய அனைத்து படங்களுமே நல்ல கருத்தாழமிக்க அருமையான படங்கள். அவர் இயக்கிய சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே மிக அருமையான படம் என்று சொன்னால் அது மிகையாகாது. 

 

பாரதி கண்ட புதுமை பெண்களான மூன்று பெண் கதாபாத்திரங்களை வைத்து மூன்று கதைகளாக்கி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இதை பார்த்தவர்கள் அனைவரும் இந்த படைப்பை பாராட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் இந்த படத்தை பார்த்த பிறகு அந்த மூன்று பெண் கதாபாத்திரங்களும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை. இது போன்று ஒரு அருமையான படத்தை அளித்த இயக்குநர் வசந்த அவர்களுக்கு என் மனமார்ந்த   வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்