![rajini](http://image.nakkheeran.in/cdn/farfuture/NAjx1M0dJ1hTBBoJEboDoI-x9wyC-IuYo12BJfO7gn4/1533347674/sites/default/files/inline-images/rajinikanths-2-0-teaser.jpg)
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 படம் கடந்த தீபாவளி வெளியீடாக வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் அதை ஏப்ரலுக்கு மாற்றி பிறகு அதுவும் முடியாததால் வேறு வழியின்றி 'காலா' படத்தை ரிலீஸ் செய்து ரசிகர்களை சரி கட்டினர். தற்போது 'காலா' படமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரஜினி அடுத்த படத்தில் நடிக்கவே சென்றுவிட்டார். ஆனால் இன்னும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்த பாடில்லை. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் இயக்குநர் ஷங்கருக்கு இன்னமும் திருப்தி ஏற்படாததால் கிராபிக்ஸ் பணிக்கு மேலும் மெனக்கிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே படம் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது பட்ஜெட்டில் மேலும் ரூ.100 கோடி கூடியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே 2.0 படம் வருகிற ஜனவரி 25ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தற்போது ஒரு பேச்சு அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.