Skip to main content

“நான் அரசியலுக்கு வந்து பதவி பெற்று...”- ராகவா லாரன்ஸ் ட்வீட்

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
raghava lawrence

 


டான்ஸ் மாஸ்டராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய லாரன்ஸ் படிபடியாக முன்னேறி நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை சினிமா துறையில் எடுத்துள்ளார். சினிமாவிற்கு வெளியே பலருக்கு பல தொண்டுகள் செய்துள்ளார். பல ஏழை குழந்தைகளை படிக்க வைக்கின்றார். மருத்துவ உதவி பெற முடியாத ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இதுபோல தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார் லாரன்ஸ்.

 

 

தற்போதைய கரோனா லாக்டவுனிலும் பலருக்கும் உதவி செய்து வருகிறார் லாரன்ஸ். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி திடீரென அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ் ட்வீட் செய்துள்ளார். அதில், “நான் அரசியலுக்கு வந்து பதவி பெற்று, ஏழை மக்களுக்கு அது செய்வேன், இது செய்வேன் என்று சொல்லி நேரத்தை வீணடிப்பதைவிட, அமைதியாக இருந்து எந்தவித எதிர்பார்ப்புமின்றி சமூகத்துக்கு சேவை செய்வதே நல்லது. என்னால் 200 குழந்தைகள் படித்து கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வராமலும் இதனை செய்யலாம். சேவையே கடவுள்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்