லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். தற்போது இவர் நடித்து, இயக்கியுள்ள காஞ்சனா-3 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியானவுடன் அவருடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்ஷய் குமாரை வைத்து இயக்குகிறார்.
![akshay kumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/927UKTisIfzjAElUHiOt54Rnh9sWxyx6CSFAE_-7io0/1556513541/sites/default/files/inline-images/akshay-kumar_0.jpg)
காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியானது தற்போது அது உண்மையாகியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அக்ஷய் குமாரை வைத்து பாடல் ஒன்றை படம் எடுத்து வருகிறார்.
காஞ்சனாவில் பேய்களுக்கு பயந்த ஹீரோ, பின் பேய்களுக்காக வில்லன்களை கொல்வார். அக்ஷய் குமார் நடிக்க இருக்கும் ஹிந்தி படத்தில், மூன்று பேய்களுக்கு பதிலாக ஒரு பேய் என தமிழ் படத்திலிருந்து சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.
![devarattam](http://image.nakkheeran.in/cdn/farfuture/am21D4Q_xlhWrQX0Mz158-Ynsyek_SimDvqg9JyEzuQ/1556528300/sites/default/files/inline-images/336-x-150-devarattam_3.jpg)
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அக்ஷய் குமாருடன் புகைப்படம் எடுத்தும் பதிவிட்டிருக்கிறார். இந்த படத்தின் ஹீரோயின் கியாரா அத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் கிளாப் போர்டுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழில் சரத்குமார் திருநங்கையாக நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
காஞ்சனா-3 தமிழில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.