கொலையுதிர் காலம் திரைப்பட டிரைலர் வெளீயிட்டு விழாவில் கலந்துகொண்ட ராதாரவி நயன்தாரா மற்றும் நடிகைகளை அவதூறாக பேசினார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிர்ப்பு கூடியது.
சின்மயி, விக்னேஷ் சிவன், விஷால் உள்ளிட்ட பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் #BanRadhaRavi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி அவர் இனி சினிமாக்களில் நடிக்க கூடாது என்றும் பலர் பதிவிட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து தற்போது வாய் திறந்துள்ள ராதாரவி.... "தி.மு.கவில் இருந்து என்னை நீக்கி விட்டதாக சொன்னார்கள். நீங்கள் என்ன நீக்குவது, நானே விலகிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதுக்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன். அரசியலில் இதெல்லாம் சகஜம். நயன்தாராவை பற்றி நான் பேசியது அவர்களையும் அவர்களை கட்டிக்கப் போறவரையும் வருத்தப்பட செய்திருந்தால் அதற்கு நான் மனவருத்தப்படுகிறேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.