![Quotation Gang first lQuotation Gang first look poster goes viralook poster goes viral](http://image.nakkheeran.in/cdn/farfuture/JrhYV_qNeFG_p9hphE6bb_zzEuZo5d3QAWhEO1M1Uo0/1648819571/sites/default/files/inline-images/70_16.jpg)
சன்னி லியோன் நடிப்பில் தமிழில் ஹாரர் காமெடி திரைப்படமாக 'ஓ மை கோஸ்ட்' திரைப்படம் உருவாக்கி வருகிறது. இதனிடையே நடிகை சன்னி லியோன் இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் நடிகர் ஜாக்கி ஜெராப், பிரியாமணி, பேபி சாரா, ஆகியோருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. நேற்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படம் குறித்து இயக்குநர் வினோத் குமார் கூறுகையில், "‘கொட்டேஷன் கேங்’ எங்களின் கனவு திரைப்படம். கடந்த வாரம் தான் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்தோம், இப்படத்தின் முழு படப்பிடிப்பும் பெரும் சவாலாக இருந்தது. ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோருடன் மற்ற காஷ்மீர் மற்றும் மும்பை நடிகர்களின் நடிப்பு படத்திற்கு மிக பெரும் பலத்தை தந்துள்ளது. தற்போது, போஸ்ட் புரடக்சன் வேலைகள் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட பல மொழி க்ரைம்-த்ரில்லர், திரைப்படம் கொட்டேஷன் கேங் என்றார். இப்படம் நடிகர்களின் சிறப்பான நடிப்பையும், தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறந்த திறமையையும் கொண்டுள்ளது. விரைவில் படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.