'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', 'மொட்டசிவா கெட்டசிவா', 'சார்லி சாப்ளின் 2' போன்ற படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. இவர் முதலில் மலையாளம் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். இவருடைய தங்கை சஞ்சனா கல்ராணி இவர் தற்போதுதான் கன்னட சினிமாத்துறையில் பிரபலமாகி வருகிறார். இவரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார்.
![sanjana vandana](http://image.nakkheeran.in/cdn/farfuture/KPKlLCc62XRllwEASLOdePBmMHq6tYEiNkB4MGt1UZc/1577683747/sites/default/files/inline-images/sanjana%20vandana.jpg)
இவர் தமிழில் ஒரு காதல் செய்வீர் என்ற் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது விஜய் டிவி ராமருக்கு ஜோடியாக ‘போடா முண்டம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
சஞ்சனா கல்ராணி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றுக்கு சென்று இருந்தார். அதே நிகழ்ச்சிக்கு இந்தி பட தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் என்ற பெண் தயாரிப்பாளரும் வந்து இருந்தார். இரவு நடைபெற்ற மது விருந்தில் சஞ்சனாவுக்கும், பெண் தயாரிப்பாளர் வந்தனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட பின்னர் அது கைகலப்பாக மாறியதாக சொல்லப்படுகிறது.
இருவருக்கும் மோதல் தீவிரமாகி சஞ்சனா கல்ராணி கோபத்தில் பீர் பாட்டிலை எடுத்து தயாரிப்பாளர் முகத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தயாரிப்பாளருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோப்பான் பார்க் போலீஸ் நிலையத்தில் தயாரிப்பாளர் புகார் செய்திருக்கிறார். சஞ்சனா கல்ராணி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மோதல் கன்னட திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சஞ்சனா கல்ராணி தரப்பில் கூறும்போது, தயாரிப்பாளருடன் வாக்குவாதம் நடந்தது உண்மை. ஆனால் அவர்கள் அடித்துக் கொள்ளவில்லை என்கின்றனர்.