Published on 02/08/2022 | Edited on 02/08/2022
![producer sr prabhu and Gnanavel Raja office income tax department inspection](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZKrhrmM_KNmz7bX_xU0Orjs77Zo-Zhha7oNhtVdMWqo/1659417646/sites/default/files/inline-images/1430.jpg)
வருமான வரித்துறையினர் காலை முதலே முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி இந்த சோதனை பிரபல தயாரிப்பாளர்களின் வீட்டில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் பிரபல தயாரிப்பார்களான அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு, எஸ். ஆர் பிரபு உள்ளிட்டோரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் காலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இன்னும் சில முன்னணி தயாரிப்பாளர்களின் பெயர்களும் இந்த சோதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.