சமீபத்தில் நயன்தாரா நடித்திருக்கும் கொலையுதிர்காலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர் ராதாரவி பெண்களைப் பற்றியும், நயன்தாரா பற்றியும் இழிவாக பேசியதாக சர்சைகள் எழுந்தன. தொடந்து பல தரப்பினர் அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், பிரபல திரப்பட இயக்குனருமான பிரவின்காந்திடம் இந்த சர்சைக்குறித்துப் பேசினோம். அப்போது அவர்...
![praveenkanth Radharavi's speech on Nayantara](http://image.nakkheeran.in/cdn/farfuture/jfjuR5DjAuodBukA1oVtH3G6Yp-m5t4M1S5xgf0iX5k/1554104309/sites/default/files/inline-images/radharavi%20praveenkanth%20in%20_0.jpg)
“ராதாரவிக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு. பத்திரிக்கையாளர்களே அவர் எப்போ பேசுவாருனு எதிர்ப்பார்க்கிற அளவுக்கு ராதாரவி நகைச்சுவையாக பேசக்கூடியவர். ரசிகர்கள் கைத்தட்டினாலே நம்மை மீறி சில விஷயங்களைப் பேசிவிடுவோம், அப்படித்தான் ராதாரவியும் பேசினார். அவர் என்ன தப்பா சொன்னாரு? சாமியாகவும் நடிக்கிறார், யோகக்கார நடிகை, என்றெல்லாம் பாசிட்டிவாகதானேப் பேசினார் என்றுப் பார்க்கும்போடு அங்கேயும் இங்கேயுமாக பேசிய வார்த்தைகளை சேர்த்துப் பார்க்கும்போது அது தவறாக தெரிகிறது. அவர் எப்போதும் குசும்பாக பேசுவார் ஒழிய நயன்தாராவை தவறாக பேசவேண்டும் என்றோ, அவரைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலோ அவர் பேசவில்லை. அவர் பேசியது சரி என்று சொல்லவில்லை, அது அவரின் ஸ்டைல். இதுவரை அந்த ஸ்டைலை எல்லோரும் பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டோம். இப்போது ஐரா படக்குழு அதன் விளம்பரத்திற்காக இதை பெரிதாக்கியிருக்கலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் திமுக ராதாரவியை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது குறித்து “தேர்தல் நடக்கவில்லையென்றால் ராதாரவி திமுக-விலிருந்து நீக்கப்பட்டிருக்கமாட்டார். தேர்தல் நேரத்தில் நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காகத்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏனென்றால் நானும் அந்த மேடையில் தான் இருந்தேன், 90 எம்.எல் படத்தைப் பற்றித்தான் அவர் அதிகமாகப் பேசினார். அந்தப் படத்திற்கு கேட்க ஆள் இல்லை, அதனால் சாதாரணமாக போச்சு. இவர்களுக்கு அந்த பரபரப்புத் தேவைப்படுகிறது, அதனால் பெரிதாக பேசுகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ராதாரவி பேசிய விஷயங்களை தெளிவுபடுத்தும் விதமாக “நயன்தாரா சீதையாகவும் நடிக்கிறார், பேய் வேடத்திலும் நடிக்கிறார், எல்லாவேடத்திற்கும் அவர் பொருந்துகிறார். அந்த காலத்தில் கே.ஆர் விஜயாவை மட்டும் சாமி வேஷம் போடுவதற்கு கூப்பிடுவாங்க, இப்போ சாமி வேஷத்திற்கு யாரைவேண்டுமானாலும் கூப்பிடுறாங்க. கையெடுத்து கும்பிடுகிற மாதிரி சில பெண்கள் இருப்பாங்க, கைத்தட்டி கூப்பிடுகிற மாதிரி சில பெண்கள் இருப்பாங்க என்று தான் அவர் பேசினார். கைத்தட்டி கூப்பிடுவது கையெடுத்து கும்பிடுவது என்ற வார்த்தைகள் காலங்காலமாக நடைமுறையில் இருக்கிற வார்த்தைகள் தான். ராதாரவி அதை புதிதாக சொல்லவில்லை. கீழே இருக்கிறவர்கள் கைத்தட்டும்போது அவருக்கு குஷியாகிவிட்டது. எல்லோரும் அவர் பேச்சை ரசித்தார்கள். அதனால் அவரும் ஃப்ளோவாக பேசிவிட்டார். அதையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தால் அது தவறாக தெரிகிற” என்று கூறினார்.
“சில நேரங்களில் சில விஷயங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படும். அதைப் ராதாரவி உணர்கிறார் பிறகு மன்னிப்பும் கேட்டுவிட்டார். நானும் அந்த மேடையில் தான் இருந்தேன். ராதாரவி பொதுவாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், வெவ்வேறு வார்த்தைகளை சேர்ட்துப் பார்க்கும்போது அவர் பெண்களை இழிவாக பேசிவிட்டார், நயன்தாராவை தவறாக பேசிவிட்டார் என்பது போல புரிந்துகொள்ளப் பட்டது. உங்களுக்கு அது தவறாக படுகிறதா? அப்படியெனில் மன்னித்துவிடுங்கள் என்ற வகையில் தான் அவர் மன்னிப்புக் கேட்டார்” என்றும் இயக்குனர் பிரவீன்காந்த் தெரிவித்தார்.