அண்மையில் ஜோதிகா நடிப்பில் ராட்சசி என்றொரு படம் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார். அந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்திக்கு அக்காவாக பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்கிறார் ஜோதிகா.
![ponmagal vanthal](http://image.nakkheeran.in/cdn/farfuture/pPCoNydROxupk9eKKn9WV-pVwfwWAPMZUve55tNYFvI/1563173890/sites/default/files/inline-images/ponmagal%20vanthal.jpg)
இந்நிலையில் ஜோதிகா மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பொன்மகள் வந்தாள் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜே.ஜே. ஃபெட்ரிக் என்னும் இயக்குநர் இந்த படத்தை இயக்குகிறார். இது 2டி நிறுவனத்தின் 9ஆவது படமாகும். 96 படத்தில் இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
சொர்கம் என்னும் படத்தில் சிவாஜி கணேஷன் பொன்மகள் வந்தால் என்றொரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். இதையடுத்து அழகிய தமிழ்மகன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் ரீமிக்ஸ் செய்ய விஜய் இந்த பாடலுக்கு நடனமாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.