![vishal](http://image.nakkheeran.in/cdn/farfuture/yDt_8Zw4QR51Ssrv0hhrYu4k-yl_W5Sr__MvnA-PshQ/1548769758/sites/default/files/inline-images/vishal%20met%20pon%20radha%20krishnan%20picture%201.jpg)
தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜா பிறந்தநாளை முன்னிட்ட 'இளையராஜா 75' என்ற விழாவிற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்கும் இரண்டு நாள் விழாக்களுக்கான டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் ஆகியோரின் வருகையும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்பட துறையில் உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இதில், இன்னொரு சிறப்பம்சமாக, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொது செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை துவங்கி வைக்க சமீபத்தில் அழைத்தனர். அவரும் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் அழைப்பிதழ் தந்து அழைத்துள்ளார். இதையடுத்து விழாவிற்கு கவர்னருடன் பொன்.ராதாகிருஷ்ணனும் பொன்.ராதாகிருஷ்ணனும் வருவது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.