Published on 06/12/2018 | Edited on 06/12/2018
![petta](http://image.nakkheeran.in/cdn/farfuture/37PhnrFvRmGH8DyCGNUK9bh8IisDcitZTZbsGaPKYC0/1544120494/sites/default/files/inline-images/Dtte0ezU8AAvo6X.jpg)
ரஜினிகாந்த் - கார்த்திக்சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'பேட்ட' படத்தின் 'மரண மாஸ்' என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் படத்தின் 2வது சிங்கிள் பாடலான 'ஊலல்லலா' என தொடங்கும் பாடல் நாளை வெளியிடவுள்ளதாக சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மேலும் 'தலைவர் பைலா' என ஹேஷ்டேக் போட்டு, ரஜினி ஆடுவது போன்று ஒரு போஸ்டரை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள 'பேட்ட' படம் வரும் பொங்கலன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.