Skip to main content

கௌதம் மேனனுடன் இணையும் பி.சி ஸ்ரீராம்!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

pc sriram

 

மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'சைக்கோ' படத்தில் முதலில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பி.சி.ஸ்ரீராம். ஆனால், படபிடிப்பு தொடங்கப்பட்டவுடன் பி.சி.ஸ்ரீராமிற்கு ஏற்பட்ட அலெர்ஜி காரணமாக அந்தப் பணியை அவருடைய துணை ஒளிப்பதிவாளரான சொஹைலிடம் கொடுத்துவிட்டு விலகினார். 

 

பி.சி. ஸ்ரீராமிற்கும் இயக்குனர் மிஷ்கினும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் பி.சி. ஸ்ரீராம் விலகினார் என்று செய்திகள் வெளியாகின. அந்தச் செய்திகளை முற்றிலுமாகவே மறுத்தார் பி.சி.ஸ்ரீராம். 

 

இதன்பின் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரங்கு தே’ படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வந்தது. இந்நிலையில் பி.சி. ஸ்ரீராம் மேலும் ஒரு புது அறிவிப்பைத் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

 

அதில், “நான் அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் பணிபுரிய உள்ளேன். அது அமேசான் தயாரிப்பில் உருவாகும் வெப் சீரீஸ். கரோனா அச்சுறுத்தல் முழுமையாக முடிவடைந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கிவிடும்” என்று தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்