![ramdhas](http://image.nakkheeran.in/cdn/farfuture/8s5fN9cmelMF8RyPfxgP2cIbUFBWFbFBuozjKdPcOsk/1603783017/sites/default/files/inline-images/ramdhas-athwale-payal-gosh.jpg)
இந்திய சினிமாவில் மிகப்பெரும் சினிமா ஆளுமையாகப் பார்க்கப்படுபவர் அனுராக் காஷ்யப். அதற்கு, உலகளவில் போற்றப்படும் அவருடைய படைப்புகளே சான்று.
அண்மையில் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாயல் கோஷ் என்ற நடிகை பாலியல் புகார் வைத்தார். நடிகையின் புகார் குறித்து மும்பை போலீஸார், அனுராக் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நடிகை பாயல் கோஷ், இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த விழா ஒன்றில் நடிகை பாயல் கோஷ், ராம்தாஸ் அத்வாலே முன்னிலையில் இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்தார். கட்சியில் அவருக்கு மகளிர் அணி துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அனுராக் காஷ்யப் - பாயல் கோஷ் விவகாரத்தில் பாயல் கோஷுக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்சி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.